+Post New Topic + Post Reply
Results 1 to 2 of 2

Thread: Bedtime Stories for Children in Tamil

  1. #1
    Senior Member
    Join Date
    Aug 2012
    Posts
    89

    Bedtime Stories for Children in Tamil

    Hi friends,

    My granny has developed the habit of narrating stories to my nephews while bedtime. Now she is out of station, and the children are nagging me to tell stories. They are not getting sleep unless and until someone describes a story. I’ve surfed many of the sites for moral stories in Tamil, but it's available in some other languages only (not in Tamil Font).

    Can anyone describe few Bedtime Moral Stories for Kids in Tamil Fonts???

    Eagerly waiting for your replies!!!
    Last edited by hEma_sampath; 11-20-2012 at 11:25 AM.

  2. #2
    Senior Member
    Join Date
    Aug 2012
    Posts
    86
    Hi Friend,

    The best way to improve the interaction between the parents and the kids is through narrating stories to them at bedtime. This increases the listening skills, imaginative power, analytical thinking, vocabulary, language, improves their knowledge about personalities, and so on.

    That too, if you are describing moral stories to them, it will build the child’s character and encourages them to be honest in his or her life.

    Here are few moral stories that can be narrated to kids during bedtime…

    1. "வினை விதைத்தவன் வினை அறுப்பான்"

    ஒரு யானை தினமும் நகர வீதியில் ஊர்வலம் வந்தது. ஒரு தையல்காரன் தினமும் அதற்கு ஒரு வாழைப்பழம் கொடுக்க, அதுவும் சந்தோஷமாக வாங்கிச் சென்றது. ஒரு நாள் எப்போதும் போல் யானை தும்பிக்கையை நீட்ட, அன்று தையல்காரன் என்ன கோபத்தில் இருந்தானோ ஒரு ஊசியை நைசாக அந்த பழத்தில் சொருகி யானைக்கு கொடுத்துவிட்டான். அதை கண்டுபிடித்த யானை எதுவும் செய்யாமல் அமைதியாக சென்றுவிட்டது.

    அந்த பழத்தை தூக்கி எரிந்து விட்டு, வெறும் தண்ணீர் மட்டுமே குடித்த யானைக்கு அந்த தையல்காரனுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்று தோன்றியது. அது தன் தும்பிக்கை நிறைய சேற்று நீரை உறிஞ்சிக் கொண்டு, அந்த தையல் கடைக்கு வந்தது. சேற்று நீர் புதிய துணியில் பட்டால் என்ன ஆகும். எல்லா துணியும் வீணாகி விடும் அல்லவா??? அதைத் தான் அந்த யானையும் செய்தது..

    தன் தும்பிக்கையில் இருந்த சேற்று நீரை கடைக்குள் வாரி இறைக்க, எல்லா துணியும் வீணாகி தையல்காரன் மக்களிடம் திட்டும், அடியும் வாங்க வேண்டிய அவலம் நேர்ந்தது.

    இந்த கதையின் நெறி - "நம்மால் முடிந்தால் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். முடியாவிட்டால் மற்றவர்களை கஷ்டப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
    நாம் என்ன செய்கிறோமோ, அது தான் நமக்கு திருப்பி வந்து சேரும்.


    2. "உழைப்புக்கு ஏற்ற ஊதியம்"

    ஒரு நாள் ஒரு அரசன், 'கிடைப்பதற்கு அரிய ஒரு பழத்தை யார் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுப்பதாக அறிவித்தான்'.

    ஒரு ஏழை விவசாயி மிகவும் கஷ்டப்பட்டு தேடி அந்த பழத்தை கொண்டு வர, வாயில் காப்போன் "உனக்கு கிடைக்கும் பரிசுத் தொகையில் பாதி எனக்கு கொடுப்பதாக இருந்தால் உள்ளே அனுமதிக்கிறேன் " என்று சொன்னான்.

    சரி என்று ஒத்துக்கொண்ட விவசாயி, பழத்துடன் உள்ளே செல்ல அரசன் அவனை மிகவும் பாராட்டி ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தான். ஆனால் அந்த விவசாயி என் நண்பனுக்கும் இதில் பங்கு உண்டு. அதனால் எதை கொடுப்பதாக இருந்தாலும், எனக்கு பாதி அவனுக்கு பாதி என்று பிரித்துக் கொடுங்கள் என்று கேட்க "யார் அந்த நண்பன்? அழைத்து வா." என்று அரசன் சொல்ல காவலாளியின் குட்டு வெளிப்பட்டது.

    உழைக்காமல் பேராசைப்பட்ட வாயில் காப்போனுக்கு கசை அடியும் , கஷ்டப்பட்டு தேடி அந்த பழத்தை கொண்டு வந்த விவசாயிக்கு பொற்காசுகளும் கிடைத்தன.

    இந்த கதையின் நெறி - "கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டுமே, நாம் ஆசைப்பட்டது கிடைக்கும். எதுவுமே இலவசமாக கிடைத்து விடாது".

    3. "நல்லது செய்தால் நல்லதே நடக்கும்"

    ஒரு நாள், ஒரு கட்டெறும்பு ஆற்றில் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டு இருந்தது. அதைக் கண்ட ஒரு பறவை, ஒரு பெரிய இலையைக் கிள்ளி எறும்பின் அருகே வீச, எறும்பு அந்த இலையின் மீது ஏறி கரையோரம் சேர்ந்து உயிர் பிழைத்தது.

    ஒரு நாள் ஒரு வேடன் அந்த பறவையை குறி பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த கட்டெறும்பு, எப்படியாவது அந்த பறவையை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி, அந்த வேடனின் காலில் ஏறி நறுக் நறுக் என்று கடித்தது.

    வலி தாங்காத வேடன், "ஆ" என்று கத்திக் கொண்டே, அம்பு எய்ய அது குறி தவறிச் செல்ல அந்த பறவையும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று பறந்து சென்றது.

    இந்த கதையின் நெறி - "நாம் ஒருவருக்கு நல்லது செய்தால் நமக்கும் அவர்கள் நல்லதே செய்வார்கள்".


    தமிழில் கதைளை குழந்தைகளுக்கு சொல்லி, தமிழ் மொழியின் பெருமையையும் இனிமையையும் அவர்களுக்கு உணர்த்துவோம்!!!



+ Post New Topic + Post Reply
  
   Recent Posts in Toddlers & Kids
   Most Popular Posts at Sukh Dukh


AddThis Feed Button RSS Feed

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may edit your posts